தெல்லிப்பழை கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட கட்டுவன்புலன் மகா வித்தியாலயத்தின் அறையில் ஆவணங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.
இச்சம்பவம் பாடசாலையின் மூன்றாம் தவணை விடுமுறை காலத்தில் நடைபெற்றுள்ளது.
பாடசாலையில் பூட்டப்பட்ட வரலாற்றுப்பாட அறையில் கற்றல் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த கற்றல் வழிகாட்டல் நூல்கள் எரிந்துள்ளன.
அன்றையதினம் பாடசாலையில் பிரத்தியோக வகுப்பிற்காக வருகைதந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களால் அறையில் இருந்து புகை வருவதை அறிந்து பிரதி அதிபருக்கு தகவல் வழங்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீயின் மூலம் கட்டிடத்திற்கோ வேறு தளபாடத்திற்கோ பாதிப்பு ஏற்படவில்லை. தீப்பற்றியதற்கு மின்னொழுக்கு காரணமாக அமையவில்லை என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
No comments:
Post a Comment