Tuesday, January 08, 2013

மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய பிரிட்டன் துணை இராஜாங்கச் செயலாளர் இலங்கை விஜயம்

alistair_ford_001மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயம் நோக்கில் பிரிட்டன் துணை இராஜாங்கச் செயலாளர் அலிஸ்டர் புர்ட் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அலிஸ்டர் புர்ட் கண்காணிக்க உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் உலகத் தமிழர் பேரவையுடன் தொடர்பை பேணும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மெக்டொனாவிற்கு, அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் வில்லியம் ஹேக் கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக அலிஸ்டர் புர்ட் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டாம் என மெக்டொனா விடுத்த கோரிக்கை தொடர்பில் இராஜாங்கச் செயலாளர் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment