சிறிலங்காவுக்கு
பயணம் மேற்கொண்டுள்ள கனேடிய அமைச்சர் ஜாசன் கென்னி வெளியிட்டுள்ள கருத்து
பாரபட்சமான, தவறான கருத்து என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்
ஜி.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் போருக்குப் பின்னர் அரசியல் நல்லிணக்க நடவடிக்கைகள்
எடுக்கப்படவில்லை. மனிதஉரிமைகள் மீறப்படுகின்றன. மீறல்களுக்குப் பொறுப்குக்
கூறப்படவில்லை. இவை தொடர்பாக கனடா அக்கறை செலுத்தி வருகிறது என்று
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள கனேடிய அமைச்சர் ஜாசன் கென்னி
கூறியிருந்தார்.இது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கனேடிய அமைச்சர் ஜாசன் கென்னி தெரிவித்துள்ள கருத்து பக்கசார்பானது மட்டுமன்றி சமநிலையற்றது.
இன்னொரு நாட்டின் உள்நாட்டு அரசியலுக்கு ஏற்றவாறு சிறிலங்கா அரசாங்கம் தனது விவகாரங்களை மேற்கொள்ளாது.
எமது மக்களின் நலன்களுக்கு அமையவே சிறிலங்கா அரசாங்கம் செயற்படும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னைச் சந்தித்த போது கனேடிய அமைச்சர் ஜாசன் கென்னி, உள்நாட்டு பிரச்சினைகள், கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவோர் தொடர்பாக வேறொரு காரணத்தைக் கூறினார்.
இப்போது வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்.
அவரது பார்வை ஒரு சீரான பார்வையாக இல்லை.
கனடாவில் பெருமளவு புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் உள்ளது என்பதும், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்றவாறு செயற்படுவோரின் தகவல்களின் அடிப்படையிலுமே கனேடிய அமைச்சர் அவ்வாறு கூறியுள்ளார் என்பதும் எமக்குத் தெரியும்.
கனேடிய அமைச்சருக்கு தற்போதைய அரசியல் நல்லிணக்க முயற்சிகள் குறித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சிறிலங்கா அரசின் பேச்சுக்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
சிறிலங்கா அரசு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கனேடிய அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிடவில்லை.
அவரது கருத்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டது.
கடந்த டிசம்பர் 4ம் நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அணுகியது.
ஆனால் குறிப்பிட்ட நாளில் தமக்கு வசதியில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment