போர்
இடர்களால் இடம்பெயர்ந்து தற்காலிகமாக சீனியாமோட்டைப் பகுதிகளில்
தங்கியுள்ள மக்கள் தம்மைச் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிப்பதற்கு
நடவடிக்கை எடுக்குமாறு ஆயர் குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை முல்லைத்தீவுப்
பகுதிகளுக்கு இலங்கை ஆயர் மன்றத் தலைவர் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை
தலைமையிலான 10 ஆயர்களைக் கொண்ட குழுவொன்று பயணத்தை மேற்கொண்டிருந்தது.
இந்தக் குழுவினர் அன்றைய தினம்
சீனியாமோட்டையில் அமைந்துள்ள நலன்புரி நிலையத்துக்குப் பயணம் செய்து மக்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக குழுவாகப் பிரிந்து சென்று ஒவ்வொரு
வீட்டிலுள்ளவர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.
அப்போது அந்தப் பகுதி மக்கள் எமது சொந்த இடங்களுக்கு எம்மை அனுமதியுங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தாம் தற்போது தங்கியுள்ள இடத்தில் அண்மைக்காலமாகப் பெய்த மழையால் பெரும் இடர்களை எதிர்நோக்கி வருவதாகவும்,
வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் தமது அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
போதிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் பாடசாலை மாணவர்கள், நோயாளர்கள் உட்பட பலரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும்
ஆயர் குழுவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment