செங்கல்பட்டு
சிறப்பு முகாம்களில் இருபது நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கும்
தமிழ் ஈழசொந்தங்களை விடுதலை செய்யக்கோரியும்.செங்கல்பட்டு மற்றும்
பூந்த்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரும் ஆர்ப்பாட்டமானது மே-17
இயக்கத்தால் நேற்று 11.01.2013 அன்று செங்கல்பட்டு பழைய பேருந்து
நிலையத்திற்கு அருகில் ஒருங்கிணைக்கபட்டது.
இந்த ஆர்பாட்டத்தில் மே-17 இயக்கத்தின்
மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்காந்தி ,திராவிடர் விடுதலை
கழகத்தின் காஞ்சி மாவட்ட தலைவர் தோழர் டேவிட் பெரியார்,திராவிடர் விடுதலை
கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன்,விடுதலை சிறுத்தைகள்
கட்சியின் செய்தி தொடர்பாளர் தோழர் வன்னியரசு,உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
தோழர் அங்கயற்கண்ணி,செங்கல்பட்டு பொது மக்கள் சார்பாக தோழர் அய்யா பால்ராசு
மற்றும் மே-17 இயக்கத்தின் தோழர்கள் ஹரிஹரன்.கார்த்திக் ஆகியோர்கள் கண்டன
உரை ஆற்றினார்கள்.
இறுதியாக மே-17 இயக்கத்தின் தோழர் சரவணன்
முழக்கங்கள்யிட நன்றியுரையுடன் ஆர்பாட்டம் நிறைவுற்றது.இந்த கண்டன
ஆர்பாட்டத்தில் சிறப்பு முகாம்களில் உள்ள தோழர்களுக்கு ஆதரவாகவும்,கியூ
பிரிவு போலிசாருக்கு கண்டனத்தை தெரிவிக்கும் விதமாகவும் தோழர்கள் பாதாகைகளை
தாங்கி நின்று தங்களது கண்டனங்களை தெரிவித்தார்கள்.இந்த ஆர்பாட்டத்தில்
மே-17 இயக்க தோழர்களும்,தோழமை இயக்கங்களின் தோழர்களும் மற்றும் பொது
மக்களும் திரளாக கல்ந்துகொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தார்கள்.
No comments:
Post a Comment