உயர்நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட குற்றப்பிரேரணை நடைமுறைகள் தொடர்பாக அமெரிக்க தூதரகம் தொடர்ந்தும் ஆழ்ந்த கரிசனையை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த குற்றப்பிரேரணையானது இலங்கையிலுள்ள ஜனநாயக நிறுவனங்களுக்கு ஏற்படும் தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதேவேளை, பல்வேறு ஆர்ப்பாட்டங்களின் போதும் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாகவும் தூதரகம்; கரிசனைகொண்டுள்ளது. அமைதியான எதிர்ப்பைத் தெரிவிப்பதற்குள்ள உரிமையை மதித்து நடக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் தூதரகம் கேட்டுக்கொள்கின்றது.
வன்முறையற்ற ரீதியில் செயற்படும் எதிர்ப்பாளர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.
சர்வதேச சமூகத்திலுள்ள எமது பங்காளர்களுடன் இணைந்து இலங்கை அரசாங்கமானது சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்து ஜனநாயக ஆட்சிமுறையின்அடிப்படைகளை மதித்துச் செயற்படவேண்டும் என கோருகின்றோம்.
No comments:
Post a Comment