திருகோணமலையில்
7 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்கள் தொடர்பில்
குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மீண்டும் சர்வதேச அழுத்தம்
ஒன்று பிரயோகிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்பு சபை என்பன இது தொடர்பில் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
திருகோணமலையின் கடற்கரையில் 2006ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கைக்குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற சிறிது நேரத்தில் ஐந்து மாணவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. எனினும் அதன் அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்தநிலையில் குறித்த மாணவர்கள் கொல்லப்பட்டு 7வது வருடத்திலாவது மாணவர்களை கொலை செய்த குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யுமாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், மற்றும் சர்வதேச மன்னிப்பு சபை என்பன கோரியுள்ளன.
இந்த சம்பவத்துக்கு இலங்கையின் விசேட அதிரடிப்படையினரே பொறுப்பு என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் இலங்கை அரசாங்கம் அதனை மறுத்திருந்தது.

No comments:
Post a Comment