
விடுத்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜெ.ஐ.சி.ஏ.) தலைவர் அகிகிகோ டனாகா சந்தித்தார். அப்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:–
ஜப்பான் முகமைக்கு நன்றி
தமிழ்நாடு 2–வது காடு வளர்ப்புத் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டம், தமிழ்நாடு பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டம், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் உள்பட பல்வேறு பெரிய திட்டங்களுக்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவி அளித்து வருகிறது.ஜப்பானிய தொழில் நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் பெரிதும் விரும்பக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஏற்கனவே 400–க்கும் மேற்பட்ட ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன. மேலும் பல நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கின்றன. தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்டத்திற்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் அளித்து வருவதற்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மக்களின் கனவுத் திட்டம்
தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023 என்ற திட்டத்தின் கீழ் விரைவில் அறிவிக்கப்பட உள்ள 200–க்கும் மேற்பட்ட புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவி செய்ய வேண்டும். இந்தத் திட்டங்களில் ஒரு சிலவற்றில் ஜப்பான் முகமையும் தமிழக அரசுடன் இணைந்து செயல்படும் என்று நான் நம்புகிறேன்.சென்னை மக்களின் கனவுத் திட்டமான நீர்வழிகள் மறுசீரமைப்புத் திட்டம், மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கும், சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கும், மதுரை – தூத்துக்குடி இடையே தொழில் போக்குவரத்திற்கான பாதைத் திட்டத்திற்கும் அடுத்த நிதியாண்டில் ஜப்பான் முகமையின் நிதி உதவியை எதிர்நோக்கியுள்ளோம்.
தமிழக வளர்ச்சிக்கு நிதியுதவி
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திற்கு திட்ட தயாரிப்பு நிதியை கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் மேம்பாட்டுக்கும் வகை செய்யும் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023 என்ற திட்டத்தை செயல்படுத்த ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒரு பங்குதாரராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
ஜெயலலிதாவுக்கு பாராட்டு
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் தலைவர் அகிகிகோ டனாகா கூறுகையில், ‘‘இந்திய பிராந்தியத்தில் தொழில் வளர்ச்சி கேந்திரமாக மாறுவதற்கு தேவையான ஆற்றல் தமிழகத்திற்கு உள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது பாராட்டுக்குரியது. இத்தகைய திட்டங்களுக்கு எங்களது முகமை தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று உறுதி அளிக்கிறேன்’’ என்றார்.
No comments:
Post a Comment