Thursday, June 20, 2013

அல்- குவைதா – தாலிபான் அமைப்புகளை தடைசெய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்க இலங்கை தீர்மானம்

alquida_CIஐக்கிய நாடுகளின் பயங்கரவாத தடை தொடர்பான இணக்கப்பாடுகளை ஏற்று அல்- குவைதா மற்றும் தாலிபான் அமைப்புகளை தடைசெய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் அஇந்த அமைப்புகளுக்கு ஆதரவளிப்பது, நிதி சேகரிப்பது, வேறு வகையில் உதவுவது என்பன தடைசெய்யப்பட்டுள்ளன.
மேற்படி அமைப்புகளுக்கு ஆதரவளிப்போர் இலங்கையின் சில பகுதிகளில் இருப்பதாக இலங்கை புலனாய்வுப் பிரிவினருக்கு தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு பேரவை அல்-குவைதா மற்றும் தாலிபான் அமைப்புகளை தடைசெய்யப்பட்ட அமைப்புகளாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment