Friday, June 28, 2013

பெற்னா தமிழ் விழா 2013இல் 'நோ பயர் சோன்' ஆவணப்படக்காட்சி! -CH4 இயக்குனர் திரு கலம் மக்றே கலந்துகொள்கிறார் (நிகழ்ச்சி நிரல் இணைப்பு)


News Serviceவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து வழங்கும் 26ஆவது தமிழ் விழா எதிர்வரும் யூன் 5ஆம் நாள் முதல் 7ஆம் நாள் வரை ரொறன்ரோ சொனி நடுவத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந் நிகழ்வின் வெள்ளி மாலை நிகழ்வில் முக்கிய இடம்பெறப்போவது எது என்ற கேள்வியையும் உருவாக்கியுள்ளது. சனல் 4 தொலைக்காட்சியின் நோ பயர் சோன் ஆவணத்திரைப்படம் காண்பிக்கப்படுவதோடு இயக்குனர் திரு கலம் மக்றே அவர்களும் நேரடியாகப் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

  
ஈழத்தில் சிறிலங்கா அரசினால் 2009இல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளை ஆவணப்படுத்துவதோடு அதை உலகுக்கு ஆதாரங்களோடு எடுத்துரைக்கும் ஆவணப்படமே நோ பயர் சோன் ஆகும். பல உலகநாடுகளிலும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்திலும் திரையியடப்பட்டது. சிறி லங்காவிற்கு எதிரான பல நாடுகளின் நிலைப்பாட்டுக்கு பெரிதும் துணை நின்ற ஆவணப்படம். போர்க் குற்றங்களுக்காக சிறி லங்கா சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதிலும் ஈழத்தமிழருக்கு ஓர் நீதி கிடைக்க வேண்டும் என்பதிலும் மிக உறுதியோடு செயற்படுபவர் இப் படத்தின் இயக்குனரான இங்கிலாந்தைச் சேர்ந்த திரு கலம் மக்றே அவர்கள்.
ஈழத்தமிழரையும் தமிழ்நாட்டுத் தமிழரையும் புலத்தில் இணைக்கும் பாலமாய் அமையும் பெற்னா தமிழ் விழாவில் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றவகையில் இயல் இசை நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமையும் நிகழ்வுகளில் கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து 3500இற்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
அனுமதிச் சீட்டுகளுக்கும் கூடிய விளக்கங்களுக்கும் கனடியத் தமிழர் பேரவை.

No comments:

Post a Comment