Saturday, June 22, 2013

வடக்கு கிழக்கில் 25000 வீடுகள் அமைக்கப்பட உள்ளது – ஐரோப்பிய ஒன்றியம்

eu_CIவடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 25000 வீடுகள் அமைக்கப்பட உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி பெர்னாட் சாவேஜ் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். அடுத்த ஆண்டில் இந்த வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
பிரதமர் டி.எம். ஜயரட்னவை சந்தித்த போது, சவேஜ் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
நாட்டின் அபிவிருத்திக்கு முழுமையான அளவில் உதவிகளை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி பாராட்டுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
யுத்த நிறைவின் பின்னர் நாட்டின் அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழ்ந்து வருவதாக பிரதமர் ஜயரட்ன குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment