Saturday, June 22, 2013

ஆபிரிக்க நாடுகளை கைக்குள் போடும் திட்டம் – அடுத்தவாரம் தன்சானியா செல்கிறார் மகிந்த

MR-appealசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்தவாரம் தன்சானியாவுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் 26ம் நாள் தன்சானியா செல்லும் அவர், வரும் ஜுலை 1ம் நாள் வரை அங்கு தங்கிருப்பார்.
சிறிலங்காவின் அதிபர் ஒருவர், ஆபிரிக்க நாடான தன்சானியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
ஆபிரிக்க நாடுகளை தன் பக்கம் இழுத்துக் கொள்ளும் சிறிலங்கா அரசின் திட்டத்தின் ஒரு கட்டமாகவே மகிந்த ராஜபக்சவின் இந்தப் பயணம் அமையவுள்ளது.

இதன்போது தன்சானிய அதிபர் ஜகாயா கிக்வெரேயை சந்தித்து பேசவுள்ள மகிந்த ராஜபக்ச, இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இந்த ஆண்டு இறுதியுடன் அங்கோலா, உகண்டா, லிபியா, மொரிட்டானியா ஆகிய நாடுகளின் உறுப்புரிமைக்காலம் முடிவடையவுள்ளது.
ஜெனிவாவில் தமக்குச் சாதகமான நிலையை உருவாக்கும் வகையில், தன்பக்கம் இழுத்து தன்சானியாவை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வைப்பது சிறிலங்கா அதிபரின் திட்டமாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment