

இதற்காக உத்தரவைப் பிறப்பிக்கும் கடிதம் வேறு வெளியாகியுள்ளதால் பெரும் சர்சை தோன்றியுள்ளது. இதனை எரிக்காமல் எங்கே கடத்திச் சென்றார்கள் என்ற கேள்விகள் இங்கே எழுந்துள்ளது. மகிந்தரின் அலுவலக கடிதத்தில் இந்த யானைத் தந்தங்கள் அனைத்தையும் பிரித்து பல்வேறு புத்தகோவில்களுக்கு கொடுக்க இருப்பதாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் எந்த புத்தகோவில்கள் இதனைப் பெற்றுள்ளது என்பது இதுவரை தெரியவில்லை. ஆக மொத்தத்தில் 356 யானைத் தந்தங்களை அப்படியே மகிந்தர் & கோ கம்பெனி ஏப்பம் விட்டு விட்டது. மொத்தத்தில் இலங்கையை மொட்டையடிக்காமல் விடமாட்டார்கள் போல இருக்கே ! ஆனால் எப்ப தான் இந்தச் சிங்களவர்களுக்கு இது புரிய ஆரம்பிக்குமோ தெரியவில்லை. மகிந்தருக்கு கொஞ்சம் எதிர்ப்பு கிளம்பினால் போதும், உடனே தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீடு என்று சொல்லி ஒரு வீட்டை இலவசமாக காட்டுகிறார்கள். உடனே சிங்களவர்களும் கிளிநொச்சி சென்று அதனை பார்த்து மகிந்த வாழ்க என்று கோஷம் போடுகிறார்கள் ! இந்த படம் எத்தனை நாள் ஓடும் என்று தான் தெரியவில்லை:
அதிர்வுக்காக,
வல்லிபுரத்தான்.
மகிந்தர் மாளிகையின் ஆதாரக் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.
source:athirvu

No comments:
Post a Comment