
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2012 ஆம் ஆண்டு மொத்தமாக 45.2 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அந்த ஆண்டு உள்நாட்டில் மட்டும் 28.8 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 15.4 மில்லியன் பேர் நாட்டு எல்லையை தாண்டிய இடம்பெயர்ந்தவர்களாக காணப்பட்டனர்.
அதுமட்டுமன்றி 2012 ஆம் ஆண்டு 93700 புகலிடகோரிக்கையாளர்களாக காணப்பட்டனர். இடம்பெயர்வுக்கு பிரதான காரணமாக போரே உள்ளது. இடம்பெயர்ந்தோரில் 55 சதவீதமானோர் ஆப்கானிஸ்தான்,சோமாலியா, ஈராக், சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச்சேர்ந்தவர்களாவர்.
கூடுதலான புகலிட கோரிக்கையாளர்களை தோற்றுவித்த நாடாக ஆப்கானிஸ்தான் காணப்பட்டது. அகதிகள் நால்வரில் ஒருவர் ஆப்கானிஸ் பிரஜையாக உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment