Friday, June 21, 2013

அரசின் வெளிநாட்டு விஜயங்களின்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தடுப்பது குறித்து வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை

DSC8589ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்களின்போது ஈழஆதரவாளர்களினால் கடந்த சில வருடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா, இந்தியா போன்ற நாடுகளில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
ஈழ ஆதரவாளர்களாலும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களினாலும் நடத்தப்பட்ட இத்தகைய ஆர்ப்பாட்டங்களின்போது அந்த நாடுகள் உரிய பாதுகாப்பு வழங்கின. அந்த நாட்டு சட்டப்படி அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி உள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட நாட்டு அரசுகளுடன் இணைந்து கூட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்களின்போது அதற்கெதிராக நடத்தப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தடுப்பது குறித்து இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு வெளிவிவகார அமைச்சு உரிய வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்தார்.

No comments:

Post a Comment