Friday, June 14, 2013

ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் குறித்து ஆலோசனை

imagesஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கையின் முன்னாள் அதிபர் ஜெயவர்த்தனே இடையே 1987-இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்துவது மற்றும் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு தொடர்பான இரண்டு நாள் மாநாடு தில்லியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) தொடங்குகிறது.
உலக மேம்பாட்டு மனித உரிமைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சுதர்சன நாச்சியப்பன் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, ஈழ தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ஞா. ஞானசேகரன் உள்பட எட்டு இலங்கை அரசியல் கட்சிகளின் தலைவர்கள், புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் அமைப்புகளின் 13 பிரதிநிதிகள், இலங்கை தமிழ் எம்பிக்கள், இலங்கை முகாம்களில் இருக்கும் தமிழர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இலங்கைத் தமிழ் தலைவர்கள் மாநாடு-2013′ என்ற இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்திய அரசிடம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment