Thursday, June 20, 2013

புலிகளின் முன்னணி அமைப்புகளை தடைசெய்யுங்கள் – அவுஸ்ரேலியாவிடம் பீரிஸ் கோரிக்கை

peiris_australia (2)அவுஸ்திரேலியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின்  ஆதரவு அமைப்புகளை தடைசெய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட்டிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாமல் ராஜபக்ச,லொஹான் ரத்வத்த, திலங்க சுமதிபால, வசந்த சேனநாயக்க  ஆகிய ஆளும்கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்குத் தலைமையேற்று  அவுஸ்திரேலியா சென்றுள்ள  இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜுலியா கில்லார்ட், வெளிவிவகார அமைச்சர் றொபேட் கார் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

இதன்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதுடன், வரும் நவம்பரில் கொழும்பில் கொமன்வெல்த் உச்சி மாநாட்டை நடத்துவதற்கான அவுஸ்திரேலியாவின் உதவியையும் கோரியுள்ளார்.
இதற்கு, அவுஸ்திரேலியப் பிரதமர், இலங்கையில் கொமன்வெல்த் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான எல்லா உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
அத்துடன், பேர்த்தில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்திய அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்வதற்காக இரு உயர் அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாகவும் அவுஸ்திரேலியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜேர்மனிக்குச் சென்றிருந்த பீரிஸ், அங்கும் விடுதலைப் புலிகளின்  ஆதரவு அமைப்புகள் குறித்து கண்காணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment