Saturday, June 15, 2013

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பது இலங்கை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : கோத்பய ராஜபக்சே

imagesஈழத் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்து வருவது இலங்கை அரசை கலக்க மடையச் செய்துள்ளது. இதை இலங்கை அதிபரின் சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபக்சே வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள கோட்டெலவாலா ராணுவ பல்கலைக் கழகத்தில் அவர் பேசியபோதுஇ  ” ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இருப்பதுஇ இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

இதற்கு முக்கியக் காரணமே தமிழக அரசியலில் இலங்கை தமிழர் விவகாரம் மிக முக்கியமான அம்சமாக இருப்பதுதான். குறிப்பாக தேர்தல் சமயத்தில் இலங்கை விவகாரம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது. சமீபகாலமாக இலங்கை அரசை சர்வதேச தளத்தில் எதிர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயல லிதா மத்திய அரசுக்கு நெருக்குதல் அளித்து வருகிறார். இது இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண் மைக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.
இலங்கையில் வாழும் சில தமிழர்கள் தங்களுக்குள்ள நெருக்கத்தின் மூலம் தமிழகம் வழியாக வெளிநாடு களில் வாழும் தமிழர் ஆதரவு அமைப்புகள் மூலம் தனித்தமிழ் ஈழம் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கடல் மார்க்கமாக இலங்கைக்கு ஆயுதம் கடத்தப்படும் அச்சுறுத்தலும் உள்ளது.
இலங்கையில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கத்துக்கு குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கும் ஆதரவு மூலம் கடல்மார்க்கமாக ஆயுதம் கடத்துவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. இது இலங்கை அரசுக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment