
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுடெல்லி பயணத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புதுடெல்லிக்கு பயணமாகவுள்ள போதிலும், பயண நாள் மற்றும் திரும்பும் நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“13வது திருத்தச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் சிறிலங்கா அரசின் முயற்சி குறித்து மட்டுமன்றி நாம் இந்திய அரசுக்குச் சொல்ல வேண்டிய பல விடயங்கள் உள்ளன.
வடக்கு, கிழக்கில் என்ன நடக்கிறது, சிறிலங்காவின் ஏனைய பகுதிகளில் என்ன நடக்கிறது என்றும் கூட எடுத்துக் கூற வேண்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ஆகியோரையும் சந்திக்கும்.
சிறிலங்கா அரசங்கம் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது மட்டுமன்றி, அதற்கு அப்பாலும் செல்லப் போவதாக இந்திய குடியரசுத் தலைவரை சந்தித்த போது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார்.
1987இல் சிறிலங்காவுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்ட நாடு என்ற வகையில், 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டிய தார்மீக கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment