Thursday, June 13, 2013

மூன்று வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதி குடும்பம் ஒன்று அடுத்தவாரம் விடுதலை

imagesஆசியோ எனப்படும் அவுஸ்திரேலியா புலனாய்வு தரப்பின் உத்தரவின் கீழ் கடந்த மூன்று வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதி குடும்பம் ஒன்று அடுத்தவாரம் விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு இணைப்பு வீசா வழங்கி சமூகத்துடன் இணைக்கப்படவிருப்பதாக, அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பிரென்டன் ஒ கோனரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஏனைய இணைப்பு வீசா வழங்கப்பட்ட அகதிகள் போலவே அவர்களும் தீவிர கண்காணிப்பின் கீழ் இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய் மற்றும் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை உள்ளிட்ட ஐந்து பேர் இவ்வாறு விடுவிக்கப்படுகின்றனர்.
இதேவேளை இந்த குடும்பத்தின் தந்தையான ராகவன் என்பவர் தொடர்ந்தும் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது தடுத்து வைத்தலுக்கு எதிரான மனு அடுத்த வாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதன் போது அவர் பெரும்பாலும் விடுவிக்கப்படலாம் என்று அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் ஆசியோவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, நியாயமான அகதிகளையும் நீண்டநாட்களுக்கு முகாம்களில் தடுத்து வைக்கின்ற முறைமைக்கு முடிவு கட்டப்படலாம் என்று, அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment