
ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடோ வெஸ்டர்வெல்லுடன் பெர்லினில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஜெர்மனியில் சமூக அமைப்புகள் என்ற போர்வையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரமாக இயங்கி வருவதாக இலங்கை அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது பற்றி விவாதிக்கப்பட்டது.
தமிழ் இன உணர்வாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியைக் கொண்டு ஜெர்மனியில் பெரும் எண்ணிக்கையில் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளப்படுவது குறித்து இலங்கை அரசு கவலை தெரிவித்துள்ளது.
எனவே அதுபோன்ற பள்ளிகள், தமிழ் சமூக அமைப்புகள் ஆகியவற்றின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என ஜெர்மனி வெளியுறவுத்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார் ஜி.எல்.பெரீஸ்.
No comments:
Post a Comment