இந்தியா, இலங்கை விவகாரங்களில் தலையீடு
செய்யக் கூடுமென இடதுசாரி கட்சித் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன
தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு தொடர்பிலான கொள்கைகள் உரிய முறையில்
அமுல்படுத்தப்படாவிட்டால், இந்திய தலையீட்டை தவிர்க்க முடியாது என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு
அதிகாரங்களை பகிர்ந்தாளிக்காது அரசாங்கம் தவறிழைக்கின்றது என அவர்
குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை இந்தியா திணிக்கவில்லை,
அதிகாரப் பகிர்வு தொடர்பில் 1957ம் ஆண்டு முதலே இலங்கைக்கும்
இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு
ஆதரவளிப்பதாக சில ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கருத்து
வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச்
சட்டம் தொடர்பிலான பிரச்சினைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உதாசீனம் செய்து
வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் மூலம் ஜனாதிபதி தமது நடிப்புத்
திறனை வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கை நடிகர் ஜகத் சமில
என்பவருக்கு நியூயோர்க் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது
வழங்கப்பட்டது. எதனையும் புரிந்து கொள்ள முடியாத காதபாத்திரமொன்றுக்கு
உயிரூட்டியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருது ஜனாதிபதிக்கே
வழங்கப்பட்டிருக்க வேண்டுமென விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment