
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபைக்
கூட்டத்திலும், இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற போர்க்
குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று
நவிப்பிள்ளை வலியுறுத்தி இருந்தார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே
அவர் போர்க்குற்ற விசாரணையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில்
போருக்குப் பிந்திய மாற்றங்கள் குறித்துத் தாம் அவதானிக்கவுள்ளதாகவும்,
தனது பயணத்தின் போது பாதிக்கப்பட்ட சகல தரப்பினருடனும் பேச்சுக்களை
நடத்தவுள்ளார் என்றும் அவர் இந்த நேர் காணலின் போது கூறியுள்ளார்.
No comments:
Post a Comment