தமிழீழ உதைபந்தாட்டக் கழகமானது உலகெங்கும் பரந்து வாழும் ஆர்வமுள்ள தமிழ்
இளையோர்களால் தமிழீழத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்
உருவாக்கப்பட்டது. இதில் சுவிஸ்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஐக்கிய
இராட்சியம், நோர்வே, இத்தாலி, கனடா ஆகிய நாடுகளில் வாழும் எமது வீரர்களை
பிரதிநிதித்துவப்படுத்துவதை காணலாம். தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்தின்
ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பிரவீன் நாகேந்திரம் அவர்கள் கருத்து
தெரிவிக்கையில்;
"இனப்படுகொலைக்கு தமிழீழத்தில் முகங்கொடுத்துவரும் எமது சகோதரர்களின்
நிலைபற்றி அறிவோம். அவர்களும் தமிழீழத்தின் சார்பில் இப்போட்டிகளில்
பங்குபற்றும் ஒரு நாள் நிச்சயம் உருவாகும். அதுவே எமது எதிர்பார்ப்பு" எனக்
கூறினார்.
|
No comments:
Post a Comment