
இந்நிலையில் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை மையமாக கொண்டு இடம்பெற்றிருந்த மாநாட்டில் முஸ்லிம் பிரதிநிதியாக பங்கெடுத்துக் கொண்டிருந்த Temple University - philadephia விரிவுரையாளர் இம்தியாஸ் ரசீக் அவர்கள் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார். இலங்கைத்தீவில் தமிழீழம் நோக்கிய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் சமூக - அரசியல் உறவுநிலை குறித்து இம்தியாஸ் ரசீக் அவர்களினால் முன்வைக்கப்பட்டிருந்த கருத்துக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பதிலுரைக் கருத்துக்களை வழங்கியிருந்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சமாதான பேச்சுவார்த்தைக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க முன்னெடுப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து ஆதாரபூர்வமாக ஆழமான முறையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் முன்வைக்கப்பட்டது. இலங்கைத்தீவில் தமிழீழம் நோக்கிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் பேசும் அனைத்து தரப்பினரதும் ஒன்றிணைவினை மையமாக கொண்டு பரஸ்பர உரையாடலாக அமைந்த இக்கருத்துப் பரிமாற்றம் ஆரோக்கியமானதாக அமைந்திருந்தது.
இதேவேளை சமீபத்திய காலங்களில் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களது சமய, பண்பாட்டு உரிமைகளுக்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாதிகிளால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் முஸ்லிம்களும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே என்பது இங்கு குறிப்பிடதக்கது.
<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/gOo5rA6fdu4?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe>
<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/CoDAbUQ3Bts?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe>
No comments:
Post a Comment