Wednesday, June 19, 2013

புதிய ஊடக ஒழுக்கவிதி பேச்சு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும்

HRW_CIபுதிய ஊடக ஒழுக்கவிதியானது பேச்சு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. ஊடக அமைச்சினால் ஊடக ஒழுக்க விதிக் கோவையொன்று அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அச்சு, இலத்திரனியல் மற்றும் இணைய ஊடகங்களை உள்ளடக்கும் வகையில் புதிய ஒழுக்க விதி உருவாக்கப்பட்டுள்ளது. ஊடகங்களை ஒடுக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த ஒழுக்க விதிகளை அறிமுகம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,
குறிப்பாக அரசாங்கத்தை விமர்சனம் செய்யும், மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் நோக்கிலேயே இந்த புதிய ஊடக ஒழுக்க விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஊடகவியலாளர்கள் ஏற்கனவே அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இந்த ஒழுக்க விதியானது மேலும் ஊடகவியலாளர்கள் சுய தணிக்கையில் ஈடுபட வழிகோலும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment