லண்டனில் இலங்கை அணிக்கு எதிராக கொடிபிடித்து ஆர்பாட்டம் !
லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில், இலங்கை மற்றும் பிரித்தானிய அணியினர்
கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். நேற்றைய தினம்(13) இடம் பெற்ற
விளையாட்டின் போது பல தமிழர்கள் கூடி நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை அணிக்கு எதிரான கோஷங்கள் அங்கே எழுப்பப்பட்டது. மகிந்தர் மற்றும்
அவரது சகோதரர்கள் தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளின் புகைப்படங்கள்,
பதாதைகள் என்பன அங்கே வைக்கப்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான
பார்வையாளர்கள் திரண்ட ஓவல் மைதானத்தில் , ஈழத் தமிழர்கள் நடத்திய இப்
போராட்டம் அனைவரது கவனத்தை ஈர்ந்தது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
மற்றும்
வரும் திங்கட்கிழமை(17.06.2013) அன்று மற்றுமொரு சுற்றுப்போட்டி
இருக்கிறது. அதிலும் இலங்கை அணியும் மற்றும் பிரித்தானிய அணியும்
விளையாடவுள்ளன. இதன்போதும் தாம் பாரிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக
ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இதில் அனைத்து தமிழர்களும் வந்து
கலந்துகொள்ளவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

14 June, 2013 by admin
source:athirvu
No comments:
Post a Comment