
உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எந்த ஓர் இனமாவது தனக்கு எதிரான
இன அழிப்புக்காகவும் மற்றும் அவர்களது சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் போராடியிருந்தன. போராடிக் கொண்டிருக்கின்றன. அதே போல் தமிழர்களாகிய நாங்கள் இன அழிப்பிலிருந்து தப்பித்து எப்போதும் தமிழ் இனமாக, தமிழ் தேசமாக நிலைத்திருக்க வேண்டும் என்ற…
…அபிலாஷைக்காக கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வழிகளிலும் ஓர் இனம் என்ற அடிப்படையில் போராடி வருகின்றோம்
.
தமிழர்களது தேசிய இருப்புக்கான உயிரினும் மேலான இந்த ஆவலை 13 வது திருத்தமோ, அதன் கீழ் வரும் மாகாண சபை தேர்தலோ, அதில் வெற்றி பெற்று நாங்கள் அமைக்கக்கூடிய மாகாண சபையோ பூர்த்தி செய்யப் போவதில்லை.
ஆனால் இந்த மாகான சபை தேர்தல் நடைபெற்றால் அதில் நாங்கள் ஏன் பங்கு பற்ற வேண்டும்? சர்வதேசத்தின் முன்னால் தமிழர்களாகின் இன்றைய காலகட்ட தேவை என்ன? என்று முழங்காவில் பிரதேசத்தில் நடைபெற்ற கிராம யாத்திரையின் போது பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் மக்களுடன் கலந்துரையாடினார்.
இச் சந்திப்பானது அப்பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோருடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .
கால்நடை மூலமாகச் சென்ற இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் செயலாளர் கு.சர்வானந்தா, அக்கராயன் பிரதேச அமைப்பாளர் பொ.கிருபாகரன் மற்றும் அப் பிரதேசத்தின் அமைப்பாளர் செ.சிறீரஞ்சன் ஆகியோர் பங்கு பற்றினர்.
தமிழர்களுடைய அபிலாஷைகளுக்காக பாடுபட்டு உழைக்கும் உங்களுடன் தான் என்றும் நாங்கள் இருப்போம் என்று மக்கள் நம்பிக்கையூட்டி அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment