
வடக்கில் தேர்தல் நடத்துவது குறித்து தாம் அனைத்துலக சமூகத்துக்கு எந்த
வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச
தெரிவித்துள்ளார்.
செசெல்ஸ் தீவுக்குச் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அந்த
நாட்டின் அதிபர் ஜேம்ஸ் மைக்கேலுடன் நடத்திய பேச்சுக்களின் போதே இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.“30 ஆண்டுகளாக நீடித்த போர் இப்போது முடிந்து விட்டது.
சிறிலங்கா இப்போது அமைதியையும், உறுதிநிலையையும் அனுபவிக்கிறது.
வடக்கு மாகாணசபைக்குத் திட்டமிட்டபடி இந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்படும்.
அனைத்துலக சமூகத்துக்கு அல்ல, எனது நாட்டு மக்களுக்கு நான் இந்த வாக்குறுதியை கொடுத்துள்ளேன்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
வடக்கிற்கு அபிவிருத்திக்காக மட்டும் 300 மில்லியன் டொலரை சிறிலங்கா அரசாங்கம் செலவிட்டுள்ளது.“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment