
இலங்கை அரசுக்கு விடுதலைப் புலிகளை அழிப்பதற்குத் தேவையான அனைத்து நவீன
ஆயுதங்களையும் பாகிஸ்தான் வழங்கியதாக அந்நாட்டு இராணுவத் தளபதி
தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத்
தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி , தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்ற இராணுவ
வீரர்களின் பயிற்சி நிறைவு வைபவமொன்றில் கலந்து கொண்டார். சுமார் இரண்டரை
வருடம் பயிற்சியை நிறைவு செய்த கடேற் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு வைபவம்
நேற்று தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்றது. இதில் 64 அதிகாரிகள்
பயிற்சியை நிறைவு செய்து வெளியேறுகின்றனர். இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக
பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி கலந்து கொண்டு
இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய போது அவர் மேற்கண்ட கருத்தைத்
தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய பாகிஸ்தான் இராணுவத் தளபதி கயானி,
இலங்கையைப் போன்றே பாகிஸ்தானும் அமைதியை விரும்பும் ஒரு நாடு.
அந்தவகையில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் வளர்த்தெடுக்கும்
வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment