Thursday, September 12, 2013

லண்டனில் ஆயுதங்களுடன் அலையும் கே.பி யின் நபர் !


கடந்த சில நாட்களாக அதிர்வு இணைய ஆசிரியர் மீதும் அதிர்வு இணையத்தின் மீதும் பேஃஸ் புக் ஊடாக அவதூறு பரப்பும் முயற்சியில் லண்டனில் உள்ள மெளலீசன் என்பவர் இறங்கியுள்ளார். பெரும் பணச்செலவில் பேஃஸ் புக்கில் விளம்பரமாகப் போட்டு, அதிர்வு தொடர்பாக அவதூறுகளைப் பரப்பிவரும் இவரின் நண்பர், தாம் ஏகே- 47 ரக துப்பாக்கியை லண்டனில் வைத்திருப்பதாகவும், தம்மை பற்றி ஏதாவது எழுதினால் சுட்டுவிடுவோம் என்றும் மின்னஞ்சலூடாக அதிர்வை மிரட்டியுள்ளார். குறிப்பிட்ட இந்த நபரின் பெயர் "எழிலன்" இவர் விடுதலைப் புலிகளின் முன் நாள் உறுப்பினர் என்றும் தற்போது கே.பியுடன் இணைந்து செயல்படுகிறார் என்றும் அறியப்படுகிறது. இன்நபர் கே.பி தொடர்பாக பேசிய சில விடையங்கள் ரக்கோட் செய்யப்பட்டு அவை பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


இவ்விருவரும் யார் ? இதோ பல திடுக்கிடும் தகவல்கள் !

எழிலன் என்று அறியப்படும் இவர், விடுதலைப் புலிகளின் நிர்வாகசேவையில் இருந்தவர். 2008ம் ஆண்டு இவரை புலிகள் இந்தியாவுக்கு அனுப்பியிருந்தார்கள். பின்னர் புலிகள் பாரிய பின்னடைவைச் சந்திக்க நேர்ந்ததால், அவர்கள் எழிலனை திரும்ப வன்னிக்கு அழைக்கவில்லை. மாறாக ராமேஸ்வரத்தில் இருந்து உயிர்காக்கும் மருந்துகள் சிலவற்றை மன்னாருக்கு அனுப்புமாறு கூறினார்கள். புலிகளின் சில முக்கிய தளபதிகள் காயமடைந்திருந்ததால், குறிப்பிட்ட சில மருந்துகளை புலிகள் அனுப்பச் சொல்லி இருந்தார்கள். ஆனால் இன்னும் சில மாதங்களில் போர் முடிந்துவிடும், புலிகள் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார்கள் என்று அறிந்துகொண்ட எழிலன், புலிகள் அனுப்பிய பணத்தை சுருட்டிக்கொண்டான். தான் படகு மூலம் மன்னாருக்கு பொருட்களை அனுப்பியதாகவும், இருப்பினும் இந்திய கடற்படையினர் அதனை பிடித்துவிட்டார்கள் என்று பொய்யுரைத்துள்ளான். காயப்பட்ட பல தளபதிகள் உரிய நேரத்தில் மருந்துகள் வராததால், பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

இந்தியாவில் "றோ" அமைப்புடன் நெருக்கத்தை ஏற்படுத்திய எழிலனுக்கும் , லண்டனில் வசித்து வந்த மெளலீசனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. போர் முடிவடைந்த பின்னர் இந்தியாவில் இருந்த எழிலன் கே.பி ஆட்களுடன் இணைந்து செயல்படத்தொடங்கினான். எழிலனை மெளலீசன் பிரான்சுக்கு அழைத்துள்ளார். பிரான்சில் இருந்து பின்னர் எழிலன் லண்டன் வந்தடைந்தான். லண்டன் வந்த எழிலன் பல காலமாக மெளலீசன் வீட்டில் தங்கியிருந்தான். பிரான்சுக்கு காரில் சென்று, அங்கே ஆயுதங்கள் சிலவற்றை வாங்கிக்கொண்டு தான் லண்டன் வந்துள்ளதாக பலரிடம் தெரிவித்துள்ள எழிலன், லண்டனில் தலைமைச் செயலகம் என்று இயங்கும் சங்கீதனைச் சுடுவேன் என்று, கூறியுள்ளார். கே.பி ....கடவுளுக்கு ஒப்பானவர் என்றும் , மக்களை அவரே காப்பாற்றினார் என்றும் கூறியுள்ளான் எழிலன். இவனே தற்போது அதிர்வு இணையத்திற்கு மின்னஞ்சலூடாக அச்சுறுத்தல் விட்டுள்ளான்.

இவனை அரவணைத்து பல காலம் லண்டனில் தன் வீட்டில் வைத்திருந்த நபரே மெளலீசன் ஆவார். இவ்விருவரும் கூட்டுச் சேர்ந்து லண்டனில் உள்ள பல தமிழ் அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்கள். விளம்பரம் போடவேண்டும் என்று கூறி அதிர்வு இணையத்தோடும் தொடர்புகொண்ட இவர்கள், பின்னர் அதிர்வு இணையம் எப்படி இயங்கவேண்டும் , எச்செய்தியை போடவேண்டும் என்று எல்லாம் கூற ஆரம்பித்தார்கள். இதனால், இவ்விருவரும் யார் என்று அதிர்வு இணையம் அறியமுற்பட்டவேளை, தங்கள் இருவரது குட்டுகளும் வெளிப்படும் என்று தெரிந்துகொண்ட இவர்கள், அதிர்வு இணையம் மீது சேறுபூசும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளார்கள். லண்டனில் வசித்துவரும் மெளலீசன், புலிகள் இயக்கத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட நபர் ஆவார். இவரது நெருங்கிய நண்பரான கடாஃபி கனடாவில் இருக்கிறார். கடாஃபி தொடர்பாகவும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக உள்ளது.

லண்டனில் மெளலீசன் பல தமிழ் அமைப்புகளோடு தொடர்புகளை பேணிவந்த காலங்களில் அவர், அதன் பொறுப்பாளர்கள், செயலாளர்கள் மற்றும் பிற செயல்பாட்டாளர்களுடன் பேசி, அவர்கள் கூறிய பலதை தனது மோபைல் போனில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். பின்னர் தனக்கு தேவையான விதத்தில் வெட்டி ஒட்டி, அன் நபரை ஒரு அயோக்கியன் போல மக்களுக்கு இனங்காட்ட முயலுவார். இதனூடாக இவர் கே.பி என்ன நினைக்கிறாரோ அதனைச் செய்து வருகிறார். தேசிய செயல்பாட்டாளர்களை, பொறுப்பாளர்களை, ஆய்வாளர்களை, மற்றும் ஊடகவியலாளர்களை இவர் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார். இதனால் எமது விடுதலைப் போராட்டத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தவே இவர் முனைகிறார் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. சமீபத்தில் வாசுகி என்னும் பெண் இலங்கை சென்றவேளை, மெளலீசன் கே.பியோடு தொடர்புகொண்ட விடையம் தொடர்பாகவும் பல ஆதாரங்கள் இருக்கிறது.

மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் ஆதாரங்களோடு, அதனையும் நாம் விரைவில் வெளியிடவுள்ளோம்.

அதிர்வுக்காக:

வல்லிபுரத்தான்.

source:athirvu






No comments:

Post a Comment