யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக காணாமற் போனோரைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம் பெற்றன.
காணாமற்போன ஆயிரத்து 500 பேர் பற்றிய விவரங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டன.
முல்லைத்தீவில் நேற்று மேற் கொள்ளப்பட்ட பதிவு நடவடிக்கைளைக்
குழப்பும் வகையில் புலனாய்வாளர்கள் எனக் கூறிக்கொண்டோர் செயற்பட்டனர் என்று
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்
தெரிவித்தார்.
இந்தப் பதிவு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இன்று யாழ்ப்பாணம்,
கிளிநொச்சி, முல்லைத் தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில்
முன்னெடுக்கப்படும் என்று மன்னார் பிரஜைகள் குழுவினர தெரிவித்துள்ளனர்.
1990 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரையில் காணமல் போனவரகள்
தொடர்பிலான விவரங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் திரட்டப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பயணம் மேற்கொள்ளும் மன்னார் பிரஜைகள்
குழுவினர் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சகல இடங்களிலும் பதிவு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கமைய காணாமற்போனோரின் உறவுகள் பொலிஸ் பதிவு, மனித உரிமைகள்
ஆணைக்குழுவில் செய்யப்பட்ட பதிவுகளின் பிரதிகள் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு
வருமாறு கேட்டுக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பதிவு நடவடிக்கைகளின் போது 750
பேர் வரையில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இதுவரை பதிவு செய்வதற்குத்
தவறியவர்கள் இன்று வியாழக்கிழமை திருமதி என்.கமலநாயகி, இல.16, கச்சேரி
கிழக்கு ஒழுங்கை, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் பதிவு செய்ய முடியும்.
தொடர்பு கொள்வதாயின் 0212221037 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு
அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில்
500 பேர் பதிவுகள் செய்துள்ளனர. பதிவு செய்யத் தவறியவர்கள் திருமதி யோகராசா
கனகரஞ்சினி, இல.59 தொண்டமான் நகர, கிளிநொச்சி என்ற முகவரியில் பதிவு செய்ய
முடியும்.
தொடர்பு கொள்வதாயின் 07780887759 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுப் புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவு
நடவடிக்கைகளில் 325 பேரே பதிவு செய்துள்ளனர். எஞ்சியவர்கள் பதிவு
செய்வதற்கு வசதியாக, கள்ளப்பாடு வடக்கு பொதுநோக்கு மண்டபத்திலும், 10 ஆம்
வட்டாரம், வற்றாப்பளை, புதுக்குடியிருப்பு (தற்போதைய மாகாணசபை உறுப்பினர்
கனகசுந்தரசுவாமியின் வதிவிடம்) பதிவுகள் இடம்பெறவுள்ளன.
இன்று வியாழக்கிழமை வவுனியா இறம்பைக்குளம். புனித அந்தோனியார்
ஆலயத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன் நாளை வெளளிக்கிழமை
மன்னார் மாவட்டத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தப் பதிவுகள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர மன்னார
பிரஜைகள் குழுவின் செயலர சிந்தாத்துரை 0771139897 என்ற இலக்கத்துடன்
தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment