Thursday, October 24, 2013

இன்னும் சற்று நேரத்தில் பிரித்தானியப் பாராளுமன்றில் "நோ பயர் சூன்"


இன்னும் சற்று நேரத்தில்(06.15) பிரித்தானியப் பாராளுமன்ற வழாகத்தில் சனல் 4கின் ஆவணப்படமான "நோ பயர் சூன்" காண்பிக்கப்படவுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆதரவுடனே இந்த ஆவண திரைப்படம் காண்பிக்கபப்டவுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. பல பிரித்தானிய எம்.பீக்கள் மற்றும் ஆழும்கட்சி அமைச்சர்கள், இதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். சுமார் 12 நிமிடங்களாக இதனை சுருக்கி காண்பிக்க அதன் தயாரிப்பாளர் காலம் மக் ரே முடிவுசெய்துள்ளார் என்று அவர் அதிர்வுக்கு மேலும் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட இந்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்ட பின்னர் கேள்வி நேரம் ஒன்று ஒதுக்கப்படவுள்ளது. இன் நேரத்தில் கேள்விகளும் விவாதங்களும் இடம்பெறும்.


குறிப்பாக இலங்கையில் நடைபெறவுள்ள, காமன்வெலத் நாடுகளின் உச்சிமாநாட்டுக்கு பிரித்தானிய பிரதமர் செல்லவேண்டுமா ? என்ற கேள்விகளே முன்வைக்கப்படவுள்ளது. இக் காலகட்டத்தில் பிரித்தானியப் பாராளுமன்றில் இந்த ஆவணப்படம் காண்பிக்கப்படுவது இலங்கை அரசை மேலும் சங்கடத்துக்கு உள்ளாக்கவுள்ளது.

source:athirvu 

No comments:

Post a Comment