அடுத்த
மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெலத் நாடுகளின் உச்சிமாநாட்டில்,
கலந்துகொள்ள பல நாட்டுத் தலைவர்கள் செல்லவுள்ளார்கள். இவர்களின் விமானங்கள்
கொழும்பு கட்டநாயக்க விமானநிலையத்துக்கு வரும்போது எவ்வாறான பாதுகாப்பு
கொடுக்கப்படவேண்டும் என்ற இரகசிய ஆலோசனை ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.
குறிப்பாக பிரித்தானியா போன்ற நாடுகளின் தலைவர்கள் பயணிக்கும்
விமானங்களுக்கு அன் நாட்டு வான் படை விமானங்களே பாதுகாப்பு வழங்குவது
உண்டு. எனவே அவையும் இணைந்தே இலங்கை வான்பரப்பில் வரவுள்ளது. இன் நிலையில், பயணிகள் விமானம் ஒன்றை அல்-கைடா போன்ற தீவிரவாத இயக்கம் கடத்தி வந்து கொழும்பு விமானநிலையத்தின் மேல் மோதும் அபாயம் உண்டு என்பதனை , சில ஐரோப்பிய நாடுகளின் உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளார்கள். இதனையடுத்தே முக்கிய பாதுகாப்புக் கூட்டம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது என சில செய்திகள் கசிந்துள்ளது. முக்கிய தலைவர்கள் கொழும்பு விமானநிலையம் வரும்வேளை , பயணிகள் விமானசேவையை நிறுத்த தற்போது முடிவுசெய்யப்பட்டுள்ளது எனவும் மேலும் அறியப்படுகிறது.
இலங்கையில் காணப்படும் பாதுகாப்பு பலகீனத்தை சில தீவிரவாத இயக்கங்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தலாம் என்ற அச்சம் தற்போது இலங்கை அரசை பீடித்துள்ளது.
No comments:
Post a Comment