index
வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களுக்கான தன்னாட்சி அலகினை அமைப்பதே எமது மக்களின் கனாவவுள்ளதால் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனத் தெரிவித்த வடமாகாகண சபையின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். கே சிவாஜிலிங்கம், தமிழ் மக்களுக்கும் உள்ளக சுயாட்சியுடனான தீர்வினை வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் தமிழ் மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தினை வழங்க மத்திய அரசாங்கம் மறுக்குமாயின் கிழக்குத் தீமோர், தென்சூடான், கொசோவா போன்று நாமும் தமிழீழத்தில் ஆட்சி அமைக்க வேண்டியேற்படும் எனவும் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று நடைபெற்றபோது அந்த அமரிவில் தனது கட்சியின் சார்பில் உரையாற்றும் போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது மக்கள் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆயுதரீதியாக மேற்கொண்ட போராட்டங்கள், இப்போராட்டங்களில் எமது மக்கள் செய்த தியாகங்கள், தலைவர்களின் இழப்புக்கள் என்பனவற்றினால் இன்று எமது போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தினை ஈர்த்துள்ளது.
எமது மக்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் எமது மக்கள் கொல்லப்பட்டமைக்கு சர்வதேச ரீதியான நீதிவிசாணை தேவை என்பதும் வலியுறுத்தப்படுகின்றது.
இந்நிலையில் வடக்கில் மக்களின் பெரும்பான்மை பலத்துடன் நாம் ஆட்சியை அமைத்துள்ளோம்.
இதனால் எமது மக்கள் தமக்கும் உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு ஒன்று கிடக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். எமது மக்களின் தாகம் வட- கிழக்கு இணைந்த தாயகமாகும்.
இந்தவைகையில் தமிழ் மக்களுக்கும் தெற்கு அரசாங்கம் உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலான ஆட்சி அதிகாரங்களை வழங்கவேண்டும். அரசாங்கம் அவ்வாறு செய்யத்தவறினால் கிழக்குத் தீமோர், தென்சூடான், கொசோவா போன்று நாமும் வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தனிநாட்டினை அமைக்க வேண்டி ஏற்படும்.
வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தமிழீழத்தை அமைப்பதே தமிழ் மக்களின் தாகமாகவுள்ளது.
இதற்காகப் போராடி உயிர்நீத்த எமது மக்களையும் எமது தலைமைகளையும் நாம் இந்நேரத்தில் மனதில் நிறுத்துவோமாக.
மக்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்றார்.