
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில்
நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் ஆபிரிக்க நாடான
காம்பியா பங்கேற்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நாடு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளது.
எனவே, எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள அமர்வுகளில் பங்கேற்கப் போவதி;;ல்லை என தெரிவி;க்கப்படுகிறது.
முன்னாள் பிரித்தானிய காலணித்துவ நாடான காம்பியா கடந்த மாதம் உறுப்புரிமையை வாபஸ் பெற்றுக்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தது.
1965ம் ஆண்டு காம்பியா பொதுநலவாய நாடுகள் அமைப்பில் உறுப்புரிமை பெற்றுக்கொண்டிருந்தது.
இதன்படி, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளின் மொத்த எண்ணிக்கை 54 லிருந்து 53 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
No comments:
Post a Comment