சில
ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கைக்குச் சென்ற ஜொனத்தன் மில்லர் (சனல் 4
ஊடகவியலாளரை) கழுத்தில் பிடித்து காரில் ஏற்றி விமானநிலையம் கொண்டுபோய்
நாடு கடத்தியது மகிந்தரின் அரசு. அதற்கு உண்டான பலா பலனை அது தற்போது
அனுபவித்து வருகிறது. இன்றைய தினம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த எம்.பி "யான
லீ ரைனோன்", மற்றும் நியூஸிலாந்து எம்.பியான "யான் லொக்கி" ஆகிய
இருவரையும் இலங்கை அரசு கைதுசெய்து பின்னர் விடுவித்துள்ளார்கள். இதில்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த லீ ரைனோன் ஒரு செனட்டர் ஆவர். தனது நாட்டில்
அவர் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் என்பது குறிப்பிடத்தக்க விடையம்.
சுற்றுலா விசாவில் இவ்விருவரும், இலங்கை சென்றுள்ளார்கள். ஆனால் அவர்களை
கண்ட சில ஊடகவியலாளர்கள் இவரிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். இவர்கள் தங்கியிருந்த விடுதியில் , அவர்கள் அக்கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டு இருக்கும்வேளையில், சிறிது நேரத்தில் எல்லாம் அவ்விடத்திற்கு வந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் இமிகிரேஷன் அதிகாரிகளும் அவர்கள் பாஸ்போட்டை பறிமுதல் செய்து அவர்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார்கள். ஊடகவியலாளர்களை அங்கிருந்து சென்றுவிடுமாறு அவர்கள் அச்சுறுத்தியும் உள்ளார்கள். மோபைல் தொலைபேசியையும் அவர்கள் பறித்து , பின்னர் தாமதமாக அவர்களிடம் கொடுத்துள்ளார்கள். குறிப்பிட்ட 2 எம்.பீக்களும் தமது நாட்டு தூதுவராலயத்தோடு உடனே பேசியிருக்கிறார்கள். இதனால் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய தூதுவர்கள் இலங்கை வெளியுறவு அமைச்சுடன் தொடர்புகொள்ள நிலைமை சீரியஸ் ஆகியது.
இதன் காரணமாக, இவ்விருவரையும் விடுதலை செய்துள்ளது இலங்கை புலனாய்வு. இவர்கள் சுமத்திய குற்றம் என்ன ? அதாவது சுற்றுலா விசாவில் இலங்கை செல்லும் எவரும் ஊடகவியலாளர் மாட்டையோ (பிரஸ் கான்பிரன்ஸ்) இல்லை என்றால் அரசியலிலோ ஈடுபடக்கூடாது என்பதாகும். இதனை இவர்கள் மீறிவிட்டார்கள் என்பது தான் இலங்கை அரசின் குற்றச்சாட்டு. காமன்வெலத் மாநாடு நடைபெறவிருக்கும் இவ்வேளையில் இலங்கை அரசு மிகவும் பதற்றமாக உள்ளது. இலங்கை வரும் அரசியல்வாதிகள், அங்கிருந்த வண்ணம் ஊடகங்களுக்கு ஏதாவது பேட்டி கொடுத்தால் , தமது கெளரவம் பாதிக்கப்படும் என்று நினைக்கிறது இலங்கை அரசு. ஆனால் இந்த 2 எம்.பீக்களும் தமக்கு நடந்ததை அவ்வளவு எழிதில் மறப்பார்களா ? இதனைத் தான் யானை தன் தலையில் மண்ணை வாரிப் போடும் என்று சொல்லுவார்களோ ?
|
No comments:
Post a Comment