Sunday, November 10, 2013

சனல்- 4 வீடியோவை பார்த்தேன்: கெமரூன் !


இலங்கையின் போர்க்குற்றங்களை பற்றிய சனல்- 4 வீடியோவை தான் பர்த்ததாகவும், இதன் மூலம் பல தீவிர கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார் என்று அதிர்வு இணையம் அறிகிறது. பிரதமரின் கூற்று, அவர் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கு பெறுவதற்கு தயாராகிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் வெளியாகியுள்ளது. ஆயினும் மாநாட்டை பகிஷ்கரிக்க் வேண்டும் என்ற கோரிக்கையை அவர் நிராகரித்திருக்கின்றார்.


இந்நிலையில் மாநாட்டில் பங்கு பற்றுவது என்பது, குற்றச்சாட்டுகளுக்கு துணை போவதாகவே அமையும் என்றும் விமர்சர்கள் கூறுகின்றனர். இதேவேளை, யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை டேவிட் கெமரூன் விஜயம் செய்யவிருப்பதாகவும் அவர் வலி. வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள நலன்புரி நிலையத்துக்கும் செல்லவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இசைப்பிரியா கொலை, பாலச்சந்திரன் கொலை தொடர்பான அனைத்து வீடியோக்களையும் அவர் பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

source:athirvu 

No comments:

Post a Comment