Monday, November 11, 2013

செனட்டர் லீ ரியானன் அதிர்வுக்கு பேட்டி: இலங்கையை தடைசெய்யவேண்டும் !

இலங்கையில் இருந்து நேற்றைய தினம் (ஞாயிறு) நாடு கடத்தப்பட்ட அவுஸ்திரேலிய செனட்டர் லீ ரியானன் தற்போது அவுஸ்திரேலியா சென்றடைந்துள்ளார். அவர் தனது அலுவலகத்திற்கு சென்றவேளை அங்கிருந்து அதிர்வு இணையத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். தன்னை தடுத்து வைத்திருந்த இலங்கை இமிகிரேஷன் அதிகாரிகள், தன்னை விடுதிக்கு அழைத்துச் சென்ற பெண்ணை பிந்தொடர்ந்து சென்றுள்ளார்கள் என்று அவர் கூறியுள்ளார். தான் தனது நிலையை விட அப்பெண்ணின் நிலைகுறித்தே கவலையடைவதாகவும் அவர் கூறியுள்ளார். நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு அவுஸ்திரேலியப் பிரதமர் செல்லக்கூடாது என்றும், கனடா மற்றும் இந்தியா போல அவுஸ்திரேலியப் பிரதமரும் இலங்கை செல்லக்கூடாது என்று தான் கோரவுள்ளதாவும் செனட்டர் லீ மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து ஏன் அகதிகள் அவுஸ்திரேலியா வருகிறார்கள் என்று அறியவே தான் இலங்கை சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தான் சுற்றுலா விசாவில் சென்றாலும் உண்மையை அறியும் பொருட்டே தான் இலங்கை சென்றிருந்தேன் என்றும், ஆனால் அங்கே என்னை அச்சுறுத்தி எனது பாஸ்போட்டை பிடுங்கிய காவல் துறையினர், பின்னர் உடனடியாக விடுதி சென்று எனது பையை எடுத்துகொண்டு நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று தனக்கு கட்டளையிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் காமன்வெலத் உச்சி மாநாடு நடக்க கூடாது என்றும் அப்படி நடந்தால் கூட அடுத்த 2 வருடத்தில் மகிந்தர் அதன் தலைவர் பதவியை எடுக்க வாய்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை தாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று லீ கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சியின் எம்.பி மற்றும் செனட்டராக இருக்கும் லீ ரியானன் இலங்கை அரசின்மேல் கடும் ஆத்திரமடைந்துள்ளார் என்பது மிகத் தெளிவாகப் புரிகிறது. ( செனட்டர் லீ தொலைபேசியில் பேசும் சத்தம் குறைவாகக் கேட்டால் உங்கள் ஒலிபெருக்கியின் சத்தத்தை கூட்டவும்.)



http://www.youtube.com/watch?feature=player_embedded&v=iV3CGsFKOZU

No comments:

Post a Comment