இந்தியாவில்
உள்ள பிரபல தொலைக்காட்சியான NDTV ல் , இலங்கைக்கு மன்மோகன் சிங்
செல்லவில்லை என்பது தொடர்பான விவாதம் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. இதில்
ஜனதாதள் கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி, கம்மியூனிஸ் கட்சியில் இருந்து
டி.ராஜா, காங்கிரஸ் முக்கியஸ்தர் மணி சங்கர் ஐயர், மீனா கந்தசாமி, என்று
பலர் கலந்துகொண்டார்கள். சூடு பறந்த விவாதமேடையாக அது மாறியது. 53
நிமிடங்கள் நீடித்த இந்த விவாதத்தில், ஒரு கட்டத்தில் டி.ராஜாவைப் பார்த்து
சுப்பிரமணிய சுவாமி, புலிகளிடம் காசு வாங்கும் நபர்கள் தான் இவ்வாறு
பேசுவார்கள் என்று கூறினார். அதனை கடுமையாக எதிர்த்த மீனா கந்தசாமி
பொறிபறக்க தனது விவாதங்களை முன்வைத்தார். இதனால் மகிந்தரின் நெருங்கிய
நண்பரான சுப்பிரமணிய சுவாமி என்ன பேசுவது என்று தெரியாது முழிக்க
ஆரம்பித்தார்.இந்தியாவுடைய வெளியுறவுக் கொள்கையை மாநிலம் ஒன்று தீர்மாணிக்க கூடாது என்றும், அதனை மத்திய அரசே தீர்மாணிக்கவேண்டும் எனவும் நிகழ்சி தொகுப்பாளர் கருத்து தெரிவித்தார். பொதுவாக ஹிந்தி பேசும் மக்கள் இதனையே நினைக்கிறார்கள். தமிழ் நாடு தற்போது மன்மோகன் சிங்கை தடுத்து விட்டது என்றும், அது அவரை அடிபணியவைத்துள்ளது என்று நினைக்கிறார்கள் ஹிந்திக்காரர்கள். இது தொடர்பாகவே இந்த விவாதம் நடைபெற்றுள்ளது. சுமார் 1 மணிநேரம் நடக்கும் இந்த விவாதத்தை சற்று பொறுமையோடு பாருங்கள். என்ன நடந்தது என்பது நன்றாகப் புரியும். விழுந்தாலும் மீசையில் மண்முட்டவில்லை என்பதுபோல, இந்தியா இலங்கையில் நடைபெறும் மாநாட்டை புறக்கணிக்கவில்லை, ஏன் என்றால் அது தனது பிரதி நிதிகளை அனுப்புகிறது(மன்மோகன் செல்லவில்லை என்றால் என்ன) என்பதுபோல சுப்பிரமணிய சுவாமி பேசிமுடித்தார்.
http://www.ndtv.com/video/embed-player/
No comments:
Post a Comment