
தஞ்சையில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் தற்போது பொலிஸ் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டு , அதனை இடித்து தரைமட்டமாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என் அதிர்வு இணையம் அறிகிறது. இதற்கான ஆதார போட்டோக்களும் அதிர்வு இணையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. கலைஞர் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்று நீண்ட நாள் கூறிவரும் சில தமிழர்கள் அம்மா ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு நன்மை செய்வார் என்று நம்பினார்கள். ஆனால் தற்போது தமிழகப் பொலிசார் இச் செயலானது பலர் மனதையும் மீண்டும் புண்படுத்தியுள்ளது.
முதல்கட்டமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தின் வெளிச் சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை புள்டோசர் சிகிதம் வந்த பொலிசாரும் நெடுஞ்சாலை துறையினரும் இணைந்தே இக் கொடுமைகளை அரங்கேற்றியுள்ளார்கள். ஈழத்தில் மாவீரர் இல்லங்களை இலங்கை இராணுவம் தரைமட்டம் ஆக்கியது. தமிழகத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை பொலிசார் புள்டோசரால் இடிக்கிறார்கள். இவ்விருவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ? குறித்த இச் செய்தி கேட்டு , பழநெடுமாறன் ஐயா, வைகோ, போன்ற உணர்வாளர்கள் பெரும் அதிர்சி வெளியிட்டுள்ளார்கள். ஊர் மக்கள் இதனை தடுக்கவேண்டும்.
சட்டவிரோதமான முறையில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். தமிழ் நாட்டில் கோடிக்கணக்கான கட்டடங்கள் அப்படி தான் கட்டப்பட்டுள்ளது. ஆனால் முள்ளிவாய்க்கால் முற்றம் சட்ட ரீதியாக அனுமதி பெறப்பட்டு பிளானிங் பர்மீஷன் எடுக்கபப்ட்டு கட்டப்பட்டது. ஆனால் பொலிசாருக்கு இது தாக் கண்களை உறுத்துகிறதா ? அதிகாலை 5.30 மணிக்கு வந்து அதன் சுவர்களை இடித்து நாசம்செய்துள்ளார்கள். இனி மெல்ல மெல்ல கட்டிடத்திலும் கைவைப்பார்கள். இதனை தமிழகத்தில் உள்ள தமிழர்கள் எவ்வாறு தடுக்கப்போகிறார்கள் ?
No comments:
Post a Comment