
தற்போது இலங்கையில் உள்ள காலம் மக் ரேயின் நடமாட்டங்களை இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து தகவல்களை சில சிங்களக் காடையர்களுக்கு வழங்கிவருகின்றார்கள். இன்று கொழும்பில் இருந்து ரயில் மூலம் யாழ் செல்ல காலம் மக் ரே முயன்றுள்ளார். ஆனால் அவரது ரயில் அனுராதபுரத்தில் வைத்து முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ரயில் ஓடிக்கொண்டு இருக்கையிலேயே கற்ககள் வீசப்பட்டு , பெரும் இடையூறுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சாரதி ரயிலை நிறுத்தியுள்ளார். அங்கே ஆயத்தமாக இருந்த பல சிங்கள காடையர்கள் குறித்த அந்த ரயிலை முற்றுகையிட்டுள்ளார்கள். சனல் 4 கின் பிற ஊடகவியாலாளர்களும் இந்த ரயிலில் பயணம் செய்துள்ளார்கள். அவர்கள் விரைந்து செயல்பட்டதாக் அவ்விடத்திற்கு பொலிசார் உடனடியாக வரவளைக்கப்பட்டுள்ளார்கள்.
இருப்பினும் அங்கு வந்த பொலிசார் காலம் மக் ரேவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவர் யாழ் செல்லமுடியாது எனவும் தெரிவித்து அவரை ஒரு வாகனத்தில் ஏற்றி மீண்டும் கொழும்புக்கு கொண்டுவந்து விட்டுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. இது நன்கு திட்டமிடப்பட்டு நடைபெறுகிறது. காலம் மக் ரே யாழ் செல்வதனை தடுக்கவே இத்திட்ட மிட்ட நாடகம் அரங்கேறியுள்ளது. அத்துடன் ஊடக அமைச்சராக கெகலிய ரம்புக்வெல சனல் 4 கின் ஊடகவியலாளர் ஜொனத்தன் மில்லர், ஊடக தர்மத்தை பாதுகாக்கவில்லை என்றும் அவர் சட்ட திட்டங்களை மீறியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே பெரும்பாலும் அவர்களை நாடு கடத்த இலங்கை அரசு முற்படும் நிலை தோன்றியுள்ளது. மகிந்தர் செல்லும் இடமெல்லாம் அவர்கள் சென்று, கேள்விகளைக் கேட்டு அவரை சங்கடப்படுத்தி வருகிறார்கள்.
நேற்றைய தினம் ஜொனத்தன் மில்லர் கேட்ட கேள்விகள் மகிந்தரை மிகவும் பாதித்துள்ளது போலத் தெரிகிறது. இல்லை என்றால் இன்று காலை கெகலிய ரம்புக்வெல இவ்வாறு கொக்கரித்திருக்கமாட்டார் அல்லவா ?
No comments:
Post a Comment