ஈரடி
வெண்பாவால் உலகுக்கு அறிவு உரைத்த இந்தியாவைச் சேர்ந்த திருவள்ளுவரின்
சிலை யாழ்.நகரிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும்
வர்த்தகர்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இந்தச் சிலை நேற்றிரவு
அகற்றப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி வசமுள்ள யாழ்.மாநகர சபை நிர்வாகத்தினாலேயே
இந்தச் சிலை அகற்றப்பட்டுள்ளது. இந்தச் சிலை அமைந்திருந்த வீதியைப்
புனரமைப்புச் செய்வதற்காகவும் இங்கு ஒளிச் சமிக்ஞைகளைப்
பொருத்துவதற்காகவுமே இந்தச் சிலை அகற்றப்பட்டுள்ளதாக
நியாயப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த சிலை பல வருடங்களுக்கு முன்னர் யாழ். நகரில் உள்ள சத்திரத்துச் சந்தியில் அமைக்கப்பட்டது. அவ்வப்போது யாழ்.நகர வர்த்தகர்களும் தனியார் நிறுவனங்களும் இணைந்து அவ்வப்போது இந்தச் சிலையை புனரமைத்து வர்ணம் பூசி அழகுபடுத்திப் பாதுகாத்து வந்தன. இந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் திடீரென அந்த இடத்திற்கு வந்த யாழ்.மாநகர சபைப் பணியாளர்கள் கூரிய ஆயுதங்களால் திருவள்ளுவர் சிலையை அகழ்ந்தெடுத்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
அகற்றப்பட்ட இந்தச் சிலை மீண்டும் யாழ்.பொது நூலகத்ததிற்கு முன்பாக நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தச் சிலையை அதே மீண்டும் அதே இடத்திலேயே நிறுவ வேண்டும் என்று யாழ் நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் பிறந்த திருவள்ளுவர் திருக்குறள் என்ற அறக்கருத்துக்கள் கொண்ட நூலை இயற்றியவராவார். இவரின் இந்த நூலின் பெருமையை உணர்ந்த பல நாடுகள் தத்தமது மொழியில் அதனை மொழிபெயர்த்து தங்கள் மக்களுக்கு வினியோகித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ssource:athirvu
No comments:
Post a Comment