இலங்கையில்
நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக்
கூடாது என்பதுடன் இந்தியாவை காப்பாற்றவும், இலங்கை தமிழர்களை காப்பாற்றவும்
நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று பாரதிய ஜனத்தா கட்சியின் மாநிலத்
தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா
கட்சி சார்பில் செஞ்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர்
பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் ஊடாக அந்த விஞ்ஞானிகளுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். மோடி பிரதமராக வரவிரும்புகின்றனர். காரணம், தற்போதுள்ள அரசு முற்றி லும் தோற்றுப்போய் உள்ளது. மாதம் ஒரு ஊழல் என கணக்கிலடங்காத ஊழல், குழு வாக சேர்ந்து ஊழல், இதில் பிரதமர், சிதம்பரம் ஆகியோரும் அடங்குவர். இலங்கை உட்பட அண்டை நாடுகள் இந்தியாவை மதிக்கவில்லை. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்தில் ஊடுருவ தமிழக மீனவர்கள் தடையாக இருப்பதால் அவர்கள் தாக்கப்படுகிறார்கள்.
இந்திய அரசு எல்லா வகையிலும் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது. இந்தியாவை காப்பாற்ற, இலங்கை தமிழர்களை காப்பாற்ற நரேந்திர மோடி பிரதமராக வேண்டும். அதற்கு நீங்கள் பாரதிய ஜனதாவிற்கு ஆதரவளிக்க வேண்டும என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment