தஞ்சாவூர்: தஞ்சாவூர் விளார் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால்
நினைவு முற்றத்தின் முன்சுவர் போலீசார் முன்னிலையில் இடிக்கப்பட்டது.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நிகழ்ந்த போரில் உயிர் இழந்த தமிழர்களின்
நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு
சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா கடந்த 10-ம் தேதி முடிவடைந்த
நிலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் நினைவு
முற்றத்தின் முன்சுவர் மற்றும் பூங்கா அகற்றப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால்
முற்றம் எனப்படுவது 2 நினைவு மண்டபங்களும், தமிழ் அன்னை சிலையும், ஈழத்
தமிழர்
போராட்டத்தில் தீக்குளித்து உயிரிழந்த 21 பேரின் சிற்பங்களையும்
கொண்ட பகுதியாகும். இதன் முன்புறத்தில் ஒரு பூங்காவும், சுற்றுச் சுவரும்
அமைந்துள்ளது. இவை இரண்டும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என்பதால்
போலீஸ் பாதுகாப்புடன் பூங்காவும், சுற்றுச் சுவரும் அகற்றப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உள்ள நினைவிடம், சிலைகள் ஆகியவற்றிற்கு
எவ்வித சேதமும் ஏற்படுத்தப்படவில்லை.
source:denamalar
No comments:
Post a Comment