நாட்டை மீட்டெடுப்பதற்காக பல்வேறு தியாகங்களை செய்த படையினரை சிறையில்
அடைத்து, அரந்தலாவை பௌத்த பிக்குகள் படுகொலை உள்ளிட்ட கொடூரச்
செயற்பாடுகளுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளை நாடாளுமன்றில் அமர்த்துவதே
ராஜபக்ச அரசாங்கத்தின் ஜனநயாகம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வியாங்கொடவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர்,
தேர்தல் நெருங்கும் போது அரசாங்கம் மக்களை பிழையாக வழிநடத்த ஏதாவது ஒன்னறை
பிடித்துக் கொள்ளும். மத்திய, வட மாகாணசபைத் தேர்தல்களின் போது எரிவாயு,
கனிய எண்ணெய் வளம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்கம் பிரசாரம் செய்தது.
உண்மையில் அவ்வாறான எரிவாயு வளமுடைய கிணறுகள் இலங்கையில் உண்டா?
அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன் மற்றும் அதன் மூலம் ஈட்டிய தரகுப் பணம் போன்றவற்றினால், மக்கள் பொருளாதார பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.தேசப்பற்றாளர்கள் போன்று பேசினாலும் ராஜபக்ச அரசாங்கம் பிரபாகரனுக்கு 800 மில்லியன் ரூபா பணம் வழஙகியுள்ளது. போர் முடிவடைந்தன் பின்னர் பான் கீ மூனுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன் காரணமாகவே உலக நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்கின்றன.நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எமது ஏழை மக்களின் பிள்ளைகள் பால் குடிக்க முடியாத அளவிற்கு வறுமையில் வாடுகின்றனர்.எனினும், ராஜபக்சவின் புதல்வர்கள் சுங்கத் தீர்வையற்ற பந்தயக் கார்களை தருவித்து, வீதிகளை மூடி ஒட்டி மகிழ்கின்றனர் என சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments:
Post a Comment