Tuesday, March 25, 2014

தமிழர்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ், திமுகவை தோற்கடியுங்கள்: ஜெயலலிதா

தமிழர்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ், திமுகவை தோற்கடியுங்கள்: ஜெயலலிதா
திண்டுக்கல்: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ், தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார் திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

'முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழக நலனுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டது. அதேபோல், தமிழர்களுக்கு எதிராக அணைப் பாதுகாப்பு மசோதாவையும் கொண்டு வந்தது. காங்கிரசுடன் சில மாதங்களுக்கு முன்பு வரை அங்கம் வகித்த தி.மு.க.வும் முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவில்லை. தற்போதும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என தி.மு.க. கூறுவது ஏமாற்றும் செயல். எனவே, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ், தி.மு.க.வை வீழ்த்த வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment