Thursday, April 10, 2014

தேசிய நலனைக் கருத்தில் கொண்டே ஜெனிவா முடிவு எடுக்கப்பட்டது – காங்கிரஸ் பேச்சாளர் அபிசேக் சிங்வி


சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, தேசிய நலன் மற்றும் அயல் நாடுகளுடனான உறவுகளை கருத்தில் கொண்டே புறக்கணிக்க முடிவெடுக்கப்பட்டது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிசேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு 4 ஆயிரம் கோடி ரூபா நலத் திட்டங்களை இந்திய அரசு செயற்படுத்தி வருகிறது.

எந்தவொரு ஆட்சியிலும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படாத உதவிகளை காங்கிரஸ் அரசாங்கம் வழங்கி வருகிறது.


தேசிய நலன் மற்றும் அயல் நாடுகளுடனான உறவுகளை கருத்தில் கொண்டு, ஜெனிவா தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.

இதன் அர்த்தம், இந்த தீர்மானத்தை நாம் ஏற்கவுமில்லை – நிராகரிக்கவுமில்லை என்பதே” என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, சிறிலங்காவில் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டு மீனவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே, ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்க முடிவெடுக்கப்பட்டதாக, இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment