Tuesday, April 29, 2014

புலம்பெயர் தமிழர்களை இன்று சந்திக்கிறார் நிஷா பிஸ்வால்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

அமெரிக்காவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

அதேவேளை, அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவுடனும், நிஷா பிஸ்வால் தனியான சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


போரின் போது இடம்பெற்ற போருக்குப் பின்னரும், சிறிலங்காவில் இடம்பெறும், பாலியல் வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment