சென்னை
சென்ட்ரல் தொடருந்து நிலையத்தில் இன்று காலை 7.45 மணியளவில்
குண்டுவெடித்து 15 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று தகவல்கள்
தெரிவிக்கின்றன.
பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், சுமார் 10 பேர்
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட
தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், 15 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்ட்ரல்
தொடருந்து நிலையத்தில், கவுகாத்தி - பெங்களூர் எக்ஸ்பிரஸ் தொடருந்து, 9வது
நடைமேடைக்கு வந்தபோது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இந்தக் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குண்டுவெடிப்புச்
சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திற்கும்,
சென்னை விமான நிலையத்திற்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையம் முழுவதுமாக காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை - சென்ட்ரல் தொடருந்து நிலையத்தில் தொடருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில்
நேற்று முன்தினம் சிறிலங்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது
செய்யப்பட்டநிலையில் இன்று குண்டு வெடிப்பு நடந்துள்ளது. |
No comments:
Post a Comment